என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

குழந்தை நலம்

ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்

ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் அன்றாட நோய் ஆகும் . ஜுரம் குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்
உடல் வெப்பத்தை அளவிட இரண்டு அலகுகள் உள்ளன :
செல்சீயஸ் & பாரன்ஹீட்
நமது உடலின் சாதாரண வெப்பநிலை
36.7-37.2* C OR 98-99* F
எனவே நாம் எந்த அலகு கொண்டு உடல் வெப்பத்தை அளவிடுகிறோம் என்பதை கவனிக்கவேண்டும் .
சராசரி வெப்பம் --- 36.7-37.2* C OR 98-99*F
மித ஜுரம் ----37.2-37.8*C OR 99-100*F
ஜுரம் ----37.8-39.4*C OR 100.-103*F
அதிக ஜுரம் ----39.4-40.5*C OR 103-105*F
விஷ ஜுரம் ---->40.1*C OR >106*F
சுரத்தை அளவிடும் இடங்கள் :
வாய்: அக்குள் ; ஆசன வாய்
குழந்தைகளுக்கு அக்குள் மற்றும் அசன வாயில் பார்ப்பதே நல்லது .
ஜுரம் என்பதே ஒரு வியாதி அல்ல , ஒரு அறிகுறி மட்டுமே .
எதனால் ஜுரம் வந்துள்ளது என பார்த்து மருந்து தந்தால் மட்டுமே ஜுரம் குறையும் .
சுரத்தை குறைக்க PARACETAMOL சிறந்த மருந்து . குழந்தயின் எடைக்கு ஏற்ப தரவேண்டும் . 15 MG PER KG.
அதாவது பத்து கிலோ குழந்தைக்கு 150 Mg தரவேண்டும் . ஜுரம் குறையவில்லை என்றால் ஆறு மணிக்கு ஒரு முறை தொடர்ந்து இதே அளவு தர வேண்டும் .
சிரப் மருந்துகள் - இரண்டு அளவுகளில் சிரப் வருகிறது .. 125 AND 250
125 என்றால் 5 ML இல் 125 MG இருக்கும்
ஒரு ML இல் 25 MG இருக்கும் .
பத்து கிலோ குழந்தைக்கு ஆறு மிலி தரவேண்டும்
250 என்றால் 5 ML இல் 250MG இருக்கும்
ஒரு ML இல் 50 MG இருக்கும் . பத்து கிலோ குழந்தைக்கு மூன்று மிலி தரவேண்டும் .
மாத்திரை அளவுகள் : 125, 250, 325, 500, 650, 750, 1000MG ஆகிய அளவுகளில் கிடைக்கும் .
8 கிலோ குழந்தைக்கு 125MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
15 கிலோ குழந்தைக்கு 250 MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
20 கிலோ குழந்தைக்கு 325MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
30கிலோ குழந்தைக்கு 500MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...